இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சர்தார் !

  • June 20, 2022 / 05:08 PM IST

நடிகர் கார்த்தி தற்பொழுது சர்தார் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் . பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்குகிறார் .இந்த படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் நடிகை லைலா நீண்ட வருடங்களுக்கு இந்த படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் அதில் ஒன்றில் வயதான தோற்றத்தில் நடிக்கிறார் . இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. இதில் சங்கி பாண்டே சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதுவரை படப்பிடிப்பு நடக்காத அசர்பைசான் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பு நடந்தது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூ.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சார்தார் படத்தின் வில்லனாக நடித்த இருப்பவர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. சுங்கி பாண்டே என்ற நடிகர் வில்லனாக நடித்து இருக்கிறார்.இவருடைய இன்ட்ரோ காட்சிகளை பிரமாண்டமான முறையில் படக்குழு படம் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது . 17 நாட்கள் இந்த படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus