SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

  • February 27, 2024 / 07:57 PM IST

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது இவர் நடிப்பில் ‘அமரன்’, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் 23-வது படமாம். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதனை ‘ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில், ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் நடிக்க ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர் கமிட்டாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus