துபாயில் ஸ்கை டைவிங் செய்த ‘சார்பட்டா பரம்பரை’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் துஷாரா விஜயன். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படம் ‘போதை ஏறி புத்தி மாறி. சந்துரு.கே.ஆர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை துஷாரா விஜயனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்ததாக இவர் நடித்த தமிழ் படம் மெகா ஹிட்டானது. அது தான் ‘சார்பட்டா பரம்பரை’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இதில் துஷாரா ‘மாரியம்மா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருந்தார்.

இப்போது நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் ‘அநீதி, நட்சத்திரம் நகர்கிறது’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். துஷாரா விஜயன் துபாயில் ஸ்கை டைவிங் செய்தபோது எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.