சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் இயக்குநர் நலன் குமரசாமி படம், இயக்குநர் பிரேம் குமார் படம் என 4 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம், அதுவும் அவர் கதையின் நாயகனாக அறிமுகமான படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அமீர் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
சமீபத்தில், இந்த படத்தை தயாரித்த ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். நேற்று இரவு இயக்குநர் அமீர் “‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை” என்று குறிப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
தற்போது, பிரபல இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சசிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். ‘பருத்திவீரன்’ இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை #StandWithAmeer” என்று பதிவிட்டுள்ளார்.
அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன்
'பருத்திவீரன்” இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை#StandWithAmeer pic.twitter.com/IaLH21xbIB— M.Sasikumar (@SasikumarDir) November 24, 2023
#Ameer#TANTIS #இயக்குனர்கள்சங்கம் #RKSelvamani #RVUdhayakumar pic.twitter.com/74jPCXTUJS
— M.Sasikumar (@SasikumarDir) November 25, 2023