தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். அறிமுகமான முதல் படத்தில் ஒரு நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும் சாதித்து காட்டியவர் சசிகுமார். அந்த படம் தான் ‘சுப்ரமணியபுரம்’. அதன் பிறகு ‘ஈசன்’ படத்தை இயக்கினாலும், ‘நாடோடிகள்’ என்ற படம் ஹீரோ சசிகுமாருக்கு அதிக லைக்ஸை பெற்று தந்தது.
‘நாடோடிகள்’ ஹிட்டிற்கு பிறகு நடிகர் சசிகுமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘போராளி, சுந்தர பாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா, கொடிவீரன், அசுரவதம், பேட்ட, கென்னடி கிளப், எனை நோக்கி பாயும் தோட்டா, நாடோடிகள் 2’ என படங்கள் குவிந்தது.
இப்போது சசிகுமார் நடிப்பில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன், முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் ஜெயப்பிரகாஷின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றுக் கொண்டு சசிகுமார் தன் வீட்டில் மூன்று மரக்கன்றுகளை நட்டு, அதன் ஸ்டில்ஸை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த சேலஞ்சில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, நடிகைகள் அஞ்சலி – நிகிலா விமல் ஆகியோரை பங்கேற்க சொல்லியிருக்கிறார் சசிகுமார்.
I’ve accepted #HaraHaiTohBharaHai #GreenindiaChallenge
from actor #jayaprakash Planted 3 saplings. Further I am nominating @thondankani @Nikhilavimal1 @yoursanjali
to plant 3 trees & continue the chain 👍thanks to @MPsantoshtrs garu for taking this intiate pic.twitter.com/4jGwKdFeg6— M.Sasikumar (@SasikumarDir) January 30, 2021