சூப்பர் ஹிட்டான சசிக்குமாரின் ‘அயோத்தி’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • March 17, 2023 / 11:21 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிக்குமார். இவர் நடிப்பில் ‘அயோத்தி, நாநா, பரமகுரு, முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘அயோத்தி’ திரைப்படம் கடந்த மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் ஆர்.மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் யஷ்பால் ஷர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

இதற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை வருகிற மார்ச் 31-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜீ5’ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus