சசிக்குமாரின் ‘காரி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • November 27, 2022 / 05:51 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிக்குமார். இவர் நடிப்பில் ‘நாநா, பரமகுரு, காரி, முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘காரி’ என்ற படம் நேற்று (நவம்பர் 25-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார். இதில் சசிக்குமாருக்கு ஜோடியாக பார்வதி அருண் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் JD.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, நாகி நீடு, ராம்குமார், சம்யுக்தா, பிரேம் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இதற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இந்த படம் உலக அளவில் ரூ.68 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus