தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிகுமார். இப்போது சசிகுமார் நடிப்பில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பே ‘எம்ஜிஆர் மகன்’ என்ற படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றது.
இந்த படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ளாராம். ஏற்கனவே, இயக்குநர் பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ என டபுள் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். முதல் முறையாக சசிகுமாருடன் இயக்குநர் பொன்ராம் கைகோர்த்திருப்பதால், ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக உள்ளது.
இதில் சசிகுமாருடன் இணைந்து மிக முக்கிய ரோலில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஹீரோயினாக மிருணாளினி ரவி நடித்துள்ளாராம். சமீபத்தில், இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு’ சர்டிஃபிகேட் அளித்துள்ளனர். தற்போது, இந்த படத்தின் செம்ம மாஸ் தகவல் கிடைத்துள்ளது. படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனராம். அதற்குள் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.