தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிகுமார். இப்போது சசிகுமார் நடிப்பில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன், முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பே ‘எம்ஜிஆர் மகன்’ என்ற படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றது.
இந்த படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ளாராம். ஏற்கனவே, இயக்குநர் பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ என டபுள் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். முதல் முறையாக சசிகுமாருடன் இயக்குநர் பொன்ராம் கைகோர்த்திருப்பதால், ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக உள்ளது. இதில் சசிகுமாருடன் இணைந்து மிக முக்கிய ரோலில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
ஹீரோயினாக மிருணாளினி ரவி நடித்துள்ளாராம். பல மாதங்களாக சசிகுமாரின் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில், படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமே ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் உறுதிபடுத்தியுள்ளது.
#MGRMAGAN – Postponed to later date. Wear Mask and stay safe.
Thank you all for this support. @SasikumarDir @ponramVVS @AnthonyInParty @Screensceneoffl @mirnaliniravi @thondankani @senthilkumarsmc @sidd_rao @skiran_kumar @vivekharshan @onlynikil @SonyMusicSouth @CtcMediaboy pic.twitter.com/dLyoTFxJes
— Screen Scene (@Screensceneoffl) April 19, 2021