இதுவரை யாரும் பார்த்திராத விவேக்கின் வீடியோவை ஷேரிட்டு சதீஷ் போட்ட உருக்கமான ட்வீட்!

  • April 24, 2021 / 04:23 PM IST

‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி நடிகர் விவேக் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின், கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால், ஏப்ரல் 17-ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி விவேக் இயற்கை எய்தினார்.

தற்போது, பிரபல காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “தங்களை சந்திக்கும் போதெல்லாம் இந்த வீடியோவை பார்த்து சிரிப்போம்… முதல் முறையாக அழுகையுடன்… மிஸ் யூ விவேக் சார்” என்று குறிப்பிட்டு, ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ பதிவை ரிலீஸ் செய்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus