கஜினிகாந்த் படத்திற்காக சாயிஷா வாங்கிய சம்பளம் ?

2018 ஆம் ஆண்டு வெளியான காதல் நகைச்சுவைத் திரைப்படம் கஜினிகாந்த் . இந்த படத்தை சந்தோஷ் பி. ஜெயக்குமார் எழுதி இயக்கி இருந்தார் . கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார் . இப்படத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் . இது 2015 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பலே பலே மகடிவோய் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். படம் வெளியான சில நாட்களில் , முன்னணி நடிகர்கள் ஆர்யா மற்றும் சாயிஷா திருமணம் செய்து கொண்டனர்.

கதாநாயகன் ரஜினிகாந்த் (ஆர்யா) தர்மத்தின் தலைவன் திரையிடும் தியேட்டரில் பிறந்தார், அந்த படத்தில் வரும் ரஜினிகாந்தின் கதாபாத்திரங்களில் ஒன்றைப் போலவே, மறக்கும் குணம் கொண்டவர். பழைய திரைப்படத்தை போல இந்த படத்தின் நாயகனை உள்ளாடையில் அறிமுகப்படுத்தி, அவர் பேண்ட்டை அணிய மறந்துவிட்டார் என்பது போல் காட்சி அமைத்து இருப்பார்கள் . இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தது .

இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த சாயிஷா இந்த படத்திற்கு சம்பளமாக 75 லட்சம் வாங்கி உள்ளார் மேலும் நடிகர் ஆர்யா இந்த படத்திற்கு ஷாரிங் முறையில் சம்பளம் பெற்று உள்ளார் அதாவது படத்திலிருந்து வரும் லாபத்தில் 50 சதவீதத்தை சம்பளமாக பெற்று இருக்கிறார் .

Share.