தமன்னாவுக்கு நன்றி சொல்லும் ஆர்யாவின் மனைவி சயீஷா

  • June 15, 2020 / 06:44 PM IST

பிரபல பாலிவுட் நடிகை சாய்ரா பானுவின் பேத்தி மற்றும் நடிகர் ஷாஹீனின் மகளான
சயீஷா, கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல தமிழ் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொண்டார் .

இவர் கடைக்குட்டி சிங்கம் , வனமகன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இசை மற்றும் நடனம் மீது ஈர்ப்பு கொண்டவர் இவர், ஒரு தீவிர நடன பயிற்சிக்காக ரியோ டி ஜானீரோ மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் செய்தாராம்.இவர் லண்டனில் தங்கியிருந்தபோது, ​​தனது பத்து வயதிலேயே லத்தீன்-அமெரிக்க வடிவிலான நடனத்தில் தனது முறையான பயிற்சியைத் தொடங்கினார் என்பது ஒரு செய்தி.

பல திறமைகளை கொண்ட சயீஷா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ,இந்த ஊடரங்கின் போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருகிறார்.

ஹிப்-ஹாப் மற்றும் பெல்லி நடனம் போன்ற பிற வடிவங்களுடன் ,ஒடிஸி மற்றும் கதக் போன்ற இந்திய கிளாசிக்கல் நடன வடிவங்களையும் சயீஷா கற்றுக்கொண்டுள்ளார்.

திறமைகள் நிறைந்திருந்தால் வதந்திகளுக்கு குறைவில்லாமல் தான் இருக்கும் என்பதற்கினங்க சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற ஒரு வதந்தி சமூக வலைதளத்தில் வைரலானது.

தற்போது நடிகை தமன்னா ,ஆர்யா – சயீஷா இணைத்திருக்கும் ஒரு புகைப்படத்தை இந்த ஜோடிக்கு பரிசளித்திருக்கிறார்.

அதற்கு சயீஷா “இந்த அற்புதமான மற்றும் சிந்தனைமிக்க பரிசுக்கு தமன்னாவுக்கு நன்றி,அழகான சிந்தனைமிக்க பரிசு இது”என்று அவரது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இந்த பரிசினை நடிகர் சவுந்தரும் இணைந்து வழங்கி இருக்கிறார். அவருக்கும் சயீஷா நன்றி தெரிவித்திருக்கின்றார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus