தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் சாயிஷா, தெலுங்கு படமான “அகில்” மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, பிறகு பாலிவுட்டில் அஜய்தேவ்கானுடன் “சிவே” படத்தில் நடித்து, பின்பு தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான “வனமகன்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
தற்போது அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் லாக்டவுன் நாட்களுக்கு முன்னர் தான் சுற்றுலா சென்ற போது எடுத்த ஒரு நடன வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை வெளியிட்டு அவர் “ஒரு தமிழ் பெண் தமிழ் பாடலை விரும்பினால் இபீசா யாட்சில் இருந்தாலும் இதுதான் நடக்கும். இட்லி மீட்ஸ் இபீசா” என்று குறிப்பிட்டுள்ளார்.
சாயிஷா லாக்டவுன் அறிவித்த நாள் முதலே வீட்டில் நடனமாடுவது போன்ற வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுதான் வருகிறார். அது இணையதளத்தில் வைரலாகி வந்தது.இவர் முறையாக பல நடனக் கலைகளைக் கற்றுத் தேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் தான் சுற்றுலா சென்றபோது ஒரு படகில் தமிழ் பாடலுக்கு நடமாடிய வீடியோவை வெளியிட்டு ஒரு தமிழ் பெண் எங்கு சென்றாலும் தமிழ் பாடலை கேட்டால் ஆடுவேன் என்று குறிப்பிட்டுள்ளது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் “டெடி” என்ற படத்தில் தனது கணவர் ஆர்யாவுடன் நடித்துக்கொண்டிருக்கும் சாயிஷா, லாக்டவுனில் தனது நேரத்தை ஆர்யாவுடன் செலவிட்டு வருகிறார்.