• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸின் ஒளிபரப்பை ரத்து செய்ய வேண்டும்… சீமான் எச்சரிக்கை!

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸின் ஒளிபரப்பை ரத்து செய்ய வேண்டும்… சீமான் எச்சரிக்கை!

  • May 21, 2021 / 08:02 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸின் ஒளிபரப்பை ரத்து செய்ய வேண்டும்… சீமான் எச்சரிக்கை!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இப்போது, சமந்தா நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘சகுந்தலம்’ என்ற தெலுங்கு படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் சீசன் 2-வின் டீசரை ரிலீஸ் செய்தனர்.

மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ள இந்த சீரிஸில் சமந்தா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டப்போகிறாராம். இதனை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கி உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் இவ்வெப் சீரிஸுக்கென ஸ்பெஷல் ட்விட்டர் எமோஜி வெளியிடப்பட்டது. இந்த எமோஜியை #TheFamilyMan, #TheFamilyMan2, #TheFamilyManOnPrime போன்ற ஹேஸ்டேக்குகளில் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளதாம்.

நேற்று (மே 20-ஆம் தேதி) இவ்வெப் சீரிஸின் ட்ரெய்லரை சமந்தா ட்விட்டரில் ரிலீஸ் செய்தார். இதனை வருகிற ஜூன் 4-ஆம் தேதி ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சீரிஸின் ஒளிபரப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி ஃபேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன.

விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல. ஈழத்தில் 2 இலட்சம் தமிழர்களை சிங்களப்பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குப் பறிகொடுத்துவிட்ட சூழ்நிலையிலும் மிகப்பெரும் சனநாயகவாதிகளாக நின்று அறப்போராட்டம் வாயிலாகவும், சட்டப்போராட்டம் வாயிலாகவும் உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் தீவிரவாதிகளெனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழர்களைத் தவறாகத் தோற்றம் கொள்ளச்செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிற இத்தொடரின் முன்னோட்டம் வெளியான உடனே உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் கோபத்துடனும், கொந்தளிப்புடனும் எதிர்வினையையும், கண்டனத்தையும் பதிவுசெய்து வருகின்றனர். சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்கள் போர் மரபுகளையும், விதிகளையும் மீறி உலக நாடுகளின் துணையோடு உள்நாட்டுப்போரை நடத்தி நச்சுக்குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாய் தமிழர்களைக் கொன்றொழித்தபோதும் சிங்கள மக்கள் மீது சிறுதாக்குதல் கூடத் தொடுக்காது மரபுவழிப் போரையே இறுதிவரை முன்னெடுத்து, அழிவைச் சந்தித்தபோதும் அறவழிலிருந்து வழுவாது நின்ற விடுதலைப்புலிகளின் மாண்பைப் பேசாது அவர்களை ஈவிரக்கமற்ற வன்முறைக்கூட்டம் போலக் காட்ட முயலும் இத்தொடரை இணையவெளியில் ஒளிபரப்புவதை ஒருநாளும் ஏற்க முடியாது என உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும் இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட ‘இனம், மெட்ராஸ் கபே’ போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, ‘தி ஃபேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும். அதனைச் செய்ய மறுத்து, ‘தி ஃபேமிலி மேன் 2’ இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!https://t.co/5zWYIaXtAf pic.twitter.com/kQzb63Vqg7

— சீமான் (@SeemanOfficial) May 21, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #The Family Man 2
  • #Web Series

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சூர்யா – விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ்… ரிலீஸானது மேக்கிங் வீடியோ!

சூர்யா – விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ்… ரிலீஸானது மேக்கிங் வீடியோ!

வடிவேலு – சுராஜ் காம்போவில் உருவாகும் காமெடி வெப் சீரிஸ்… எந்த OTT தளத்தில் ரிலீஸ் தெரியுமா?

வடிவேலு – சுராஜ் காம்போவில் உருவாகும் காமெடி வெப் சீரிஸ்… எந்த OTT தளத்தில் ரிலீஸ் தெரியுமா?

சூர்யா – விஜய் சேதுபதி நடித்துள்ள ‘நவரசா’ வெப் சீரிஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

சூர்யா – விஜய் சேதுபதி நடித்துள்ள ‘நவரசா’ வெப் சீரிஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த சூர்யா – விஜய் சேதுபதி நடித்துள்ள ‘நவரசா’ வெப் சீரிஸ் டீசர்!

எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த சூர்யா – விஜய் சேதுபதி நடித்துள்ள ‘நவரசா’ வெப் சீரிஸ் டீசர்!

சூர்யா – விஜய் சேதுபதி நடிக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ் … வெளியானது புதிய ஸ்டில்ஸ்!

சூர்யா – விஜய் சேதுபதி நடிக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ் … வெளியானது புதிய ஸ்டில்ஸ்!

சூர்யா – விஜய் சேதுபதி நடித்துள்ள ஆந்தாலஜி வெப் சீரிஸ் ‘நவரசா’… எப்போது ரிலீஸ்?

சூர்யா – விஜய் சேதுபதி நடித்துள்ள ஆந்தாலஜி வெப் சீரிஸ் ‘நவரசா’… எப்போது ரிலீஸ்?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version