‘யாத்திசை’ படத்தை பார்த்துட்டு இயக்குநர் சீமான் என்ன சொன்னார் தெரியுமா?

  • April 25, 2023 / 08:37 PM IST

இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘யாத்திசை’. இதில் ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலக்ஷ்மி, குரு சோமசுந்தரம், சந்திரக்குமார், செம்மலர் அன்னம், சுபத்ரா, சமர், விஜய் சேயோன், ராஜசேகர், வைதேகி, சீனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சக்கரவர்த்தி இசையமைத்துள்ள இதற்கு அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார், மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘சிக்ஸ் ஸ்டார் எண்டர்டெயின்மெண்ட் – வீனஸ் இன்போடெயின்மெண்ட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்து ரசித்த திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ‘யாத்திசை’ படக்குழுவினரை பாராட்டி ட்வீட் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus