தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் “தர்மதுரை”. தற்போது இந்த படம் நாலு வருடங்களை ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவு செய்கிறது.
இதையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தற்போது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் நான்கு வருடங்களை இந்த படம் நிறைவு செய்ததை குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை கண்டு மகிழ்ச்சி அடைந்த இந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி அவரது பதிவை ஷேர் செய்து “தயாரித்த சினிமாவை சொன்ன தேதியில் சொன்ன படி எடுத்து அதை வெளியிட்டு பெருமை சேர்த்து படைப்பின் அருமை உணர்ந்து இன்றும் மனதில் அதை சுமந்து கொண்டாடும் கலைஞனே நீர் வாழ்க” என்று தயாரிப்பாளர் சுரேஷை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே ஆகியோரும் நடித்திருந்தார்கள்.
எம்.சுகுமாரன் ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகளை காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். விஜய் சேதுபதி இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றார்.
நார்வே ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி இந்த படத்திற்காக பெற்றார். 64 ஆவது படங்களுக்கான தேசிய விருதுகள் நிகழ்ச்சியில் இந்த படத்தில் வரும் “எந்த பக்கம்” என்ற பாடலை எழுதியதற்காக வைரமுத்து விருதைப் பெற்றார்.
தயாரித்த சினிமாவை சொன்ன
தேதியில் சொன்ன படி எடுத்து அதை வெளியிட்டுப் பெருமை சேர்த்து படைப்பின் அருமை உணர்ந்து இன்றும் மனதில் சுமந்து கொண்டாடும் கலைஞனே @RkSuresh7 நீர் வாழ்க@VijaySethuOffl @tamannaahspeaks @realradikaa @thisisysr @Vairamuthu @mynnasukumar @onlynikil @mukasivishwa https://t.co/H5bzhadugM— Seenu Ramasamy (@seenuramasamy) August 12, 2020
தற்போது விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.