ஜி.பி.முத்துவை புகழ்ந்த இயக்குனர் சீனுராமசாமி.. ! எதற்காக தெரியுமா ?

  • October 27, 2022 / 12:17 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

பிக் பாஸ் சீசன் 6 போட்டியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த போட்டியாளர் ஜி.பி.முத்து . இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை கலகலப்பு பஞ்சம் இல்லை . முதல் வாரத்தின் தலைவராகவும் இவர் இருந்தார் . தொடர்ந்து ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தந்து வந்தனர் . ஆனால் தனது பிள்ளைகளை விட்டு பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை எனவே நான் போட்டியில் இருந்து விலகி கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு இவர் போட்டியில் இருந்து விலகிவிட்டார் .

இந்நிலையில், போட்டியாளர் ஜி.பி.முத்து வெளியேறியது குறித்து இயக்குனர் சீனுராமசாமி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸ் சீசன் ஆறிலிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜிபி முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்” என பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus