செல்வராகவன் – நட்டி நடிக்கும் ‘பகாசூரன்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்

  • August 28, 2022 / 08:50 PM IST

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இப்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘சாணிக் காயிதம்’ ஆகிய இரண்டு படங்களிலும் செல்வராகவனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

தற்போது, செல்வராகவன் இயக்கி, நடித்து வரும் படம் ‘நானே வருவேன்’. இது தவிர ‘பகாசூரன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கி வருகிறார்.

இதில் செல்வராகவனுடன் இணைந்து நட்டியும் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை இன்று செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus