தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிகண்டன். இவர் ‘காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஏலே, நெற்றிக்கண், ஜெய் பீம், சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். மணிகண்டன் ஹீரோவாக நடித்த ‘குட் நைட்’ என்ற படம் கடந்த ஆண்டு (2023) ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது.
கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படமான ‘லவ்வர்’ திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார்.
இதில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி ப்ரியா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்து ரசித்த பிரபல இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் ‘லவ்வர்’ டீமை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
Watched #lover
Loved it. Terrific portrayal of this generation love. After few min I forgot I was watching a movie. So realistic.
Brilliant performances from @Manikabali87 @srigouripriyaWritten & directed by @Vyaaaas Brilliant job !
A @RSeanRoldan musical !!…— selvaraghavan (@selvaraghavan) February 16, 2024