தனுஷை செதுக்கிய சிற்பி செல்வராகவனுக்கு வயசு 18

  • May 11, 2020 / 08:12 AM IST

இயக்குனர் செல்வராகவன் சினிமா துறைக்கு வந்து இன்றுடன் 18 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படம் மூலம் எழுத்தாளராக கோலிவுட்டில் அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் ஹீரோவாக நடித்த அந்த படம் ரிலீஸாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் #18YrsOfSelvaraghavan என்கிற ஹேஷ்டேகில் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

செல்வா 18 ஆண்டுகளில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே. ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . இந்நிலையில் ரசிகர்கள் ட்விட்டரில் தன்னை கொண்டாடுவதை பார்த்த செல்வராகவன் நன்றி தெரிவித்துள்ளார்.

செல்வா திரைப்படங்கள் எடுப்பதில் மட்டும் வித்தியாசமானவர் அல்ல. ட்வீட் போடுவதிலும் வித்தியாசமானவர் தான். அவர் ட்விட்டரில், சொல்லும் சில விஷயங்கள் எளிதாகத் தெரியும், ஆனால் தொடர்ந்து செய்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus