தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் மற்றும் நட்சத்திர நடிகராக இருக்கும் தனுஷ் இருவரும் இணைந்து தங்கள் கூட்டணியில் வெளிவந்த வெற்றி திரைப்படமான காதல் கொண்டேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தனுஷ் தனது அடுத்த திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால், செல்வராகவன் தனது அடுத்த படத்திற்காக கௌதம் கார்த்திக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது தகவல் வந்துள்ளது.
இந்த படம் வேறு கதையா இல்லை தனுஷ் நடிக்கவிருந்த இடத்தில் தற்போது கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை இவர்கள் வெளியிடும் வரையில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!