தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகும் ‘நானே வருவேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் இந்த ஆண்டு (2021) ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.
Selvaraghavan Tweeted About Dhanush’s Naane Varuven1
இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறாராம். தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இயக்குநர் செல்வராகவனே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Excited !@dhanushkraja @theVcreations @thisisysr @Arvindkrsna pic.twitter.com/hUasL5RuFb
— selvaraghavan (@selvaraghavan) June 23, 2021