காதல் கொண்டேன் , 7ஜி ரெயின்போ காலனி , ஆயிரத்தில் ஒருவன் , புதுப்பேட்டை போன்ற ரசிகர்கள் கொண்டாடும் படங்களை இயக்கியவர் இயக்குனர் செல்வராகவன் . சாணி காகிதம் , பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் மூலம் தற்போது நடிகனாகவும் அவதாரம் எடுத்து உள்ளார் . மோகன் .ஜி .இயக்கத்தில் பகாசூரன் படத்திலும் நடித்து வருகிறார் .
இந்நிலையில் செல்வராகவன் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையை தனது தந்தையான கஸ்தூரி ராஜா அவர்களிடம் கூறியுள்ளார் . இயக்குனர் செல்வராகவனின் தந்செல்வராகவன் தை கஸ்தூரி ராஜா இயக்குனராக இருந்தாலும் தந்து மகன் சினிமாவிற்கு வருவதை விரும்பவில்லை .இது பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில் பேசி உள்ளார் அதில் “சிறு வயதில் இருந்தே செல்வராகவனுக்கு படிப்பது என்றால் மிகவும் விருப்பம். குறிப்பாக சிறந்த ஆங்கில புத்தகங்களை எடுத்தால் வைக்காமல் படிப்பான். அதே போல உலக அளவில் புகழ்பெற்ற ஆங்கிலப் படங்களையும் பார்ப்பான்.
இப்படி பாடத்தைவிட்டு, விலகுகிறானே என வருத்தப்பட்டேன். அவனை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்கவைத்து, டெக்ஸ்டைல் பிஸினஸில் ஈடுபடுத்த வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. தனுஷ்தான் திரையுலகத்துக்கு வரவேண்டும் என நினைத்தேன். ஆனால் செல்வா இயக்குனராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான் .
இயக்குனர் கே.பாலசந்திரிடம், ‘திரைத்துறை வேண்டாம் என செல்வராகவனுக்கு புத்திமதி சொல்லுங்கள்’ என்று கூறினேன் . அவரும் செல்வராகவனை அழைத்து பேசினார். பேசிவிட்டு, ‘இவனிடம் ஏதோ விஷயம் இருக்கிறது. சினிமாவில் பெரிய ஆளாக வருவான். என்னிடமே இருக்கட்டும்’ என்று பாலச்சந்தர் கூறியுள்ளார். சரி, என அவரிடமே உதவியாளராக சேர்த்துவிட்டேன். பத்து நாள்தான் போனான். ஏன் என்று கேட்டதற்கு, ‘அவர் டிவி சீரியல் இயக்குகிறார்.. நமக்கு தேவையான மைலேஜ் இல்லை’ என்ற செல்வா சொன்னது கஸ்தூரி ராஜா அதிர்ந்து போகி விட்டதாக கூறியுள்ளார் .
பிறகு தமிழ் சினிமாவில் தான் நினைத்த இடத்தை செல்வராகவன் அடைந்துவிட்டான் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்று கூறியுள்ளார் கஸ்தூரி ராஜா.