2003 ஆம் ஆண்டு வெளியான “காதல்கொண்டேன்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதற்கு முன் “துள்ளுவதோ இளமை” படத்தின் கதையை இவர்தான் எழுதியிருந்தார்.
இவர் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. பின் இவர் இயக்கத்தில் வெளியான “இரண்டாம் உலகம்” திரைப்படம் வித்தியாசமான கதை களத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டது.
கடைசியாக இவர் சூர்யா நடிப்பில் “என்ஜிகே” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இவர் மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளதாக ஏற்கனவே வெளியான செய்தியை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கிவிட்டதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.