தெலுங்கு சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சந்திரமோகன். இவர் ஹீரோவாக அறிமுகமான முதல் தெலுங்கு படம் ‘ரங்குலா ராட்டினம்’. இந்த படத்தை பி.என்.ரெட்டி இயக்கியிருந்தார்.
இப்படம் சூப்பர் ஹிட்டானதும் சந்திரமோகனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ஒரு கட்டத்தில் குணச்சித்திர ரோலிலும் வலம் வந்து ரசிகர்களிடம் அப்லாஸ் வாங்கினார்.
இவர் தமிழில் ‘நாளை நமதே, நீயா, டைம், சகுனி’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது, நடிகர் சந்திரமோகனுக்கு (வயது 82) இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.