செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • September 15, 2023 / 11:19 AM IST

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…

1.மார்க் ஆண்டனி :

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி’ மற்றும் இயக்குநர் ஹரி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அபிநயா, செல்வராகவன், சுனில் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்துள்ளார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

2.எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு :

செ.ஹரி உத்ரா இயக்கியுள்ள படம் ‘எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’. இதில் ஷரத், ஐரா ஜெயின், கஞ்சா கருப்பு, சோனா, மதன், மகேந்திரன், கஜராஜ், ராசி அழகப்பன், தஷ்மிகா லக்ஷ்மணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அலீமிர்ஸாக் இசையமைத்துள்ள இதற்கு வினோத் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், கிஷோர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘உத்ரா புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில், இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. படத்தை வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus