இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • September 22, 2023 / 07:21 PM IST

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

1.டைனோசர்ஸ் :

உதய் கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கும் கேங்ஸ்டர் படம் ‘டைனோசர்ஸ்’ (DIE NO SIRS). இந்த படத்தை இயக்குநர் M.R.மாதவன் இயக்கியுள்ளார். இதில் உதய் கார்த்திக்கு ஜோடியாக சாய் ப்ரியா தேவா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ஸ்ரீனி, மணிக்ஷா, கவின் ஜெயபாபு, ஜானகி சுரேஷ், யாமினி சந்தர், ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு போபோ சசி இசையமைத்துள்ளார், ஜோன்ஸ்.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் பிரபல OTT தளமான ‘சிம்ப்ளி சவுத்’ல் ரிலீஸாகியுள்ளது.

2.வெப் :

நட்டி ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரூன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஷில்பா மஞ்சுநாத், மொட்ட ராஜேந்திரன், முரளி, அனன்யா மணி, ஷாஸ்வி பாலா, சுபப்ரியா மலர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார், கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார், சுதர்சன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படம் பிரபல OTT தளமான ‘சிம்ப்ளி சவுத்’ல் ரிலீஸாகியுள்ளது.

3.மால் :

இயக்குநர் தினேஷ் குமரன் இயக்கியுள்ள படம் ‘மால்’. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அஸ்ரஃப், VJ பப்பு, ஜெய், சாய் கார்த்தி, கௌரி நந்தா, தினேஷ் குமரன், எஸ்.பி.கஜராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு பத்மயன் சிவானந்தம் இசையமைத்துள்ளார், ஷிவராஜ் ஒளிப்பதிவு செய்ததுடன், படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இதனை ‘கோவை பிலிம்மேட்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் பிரபல OTT தளமான ‘ஆஹா’வில் ரிலீஸாகியுள்ளது.

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus