லாக்டவுன் நேரத்தில் கடன் தொல்லையால் சின்னத்திரை நடிகர் தற்கொலை

  • May 21, 2020 / 10:23 AM IST

கடன் தொல்லையால் பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பஞ்சாபைச் சேர்ந்த நடிகர் மன்மீத் கிரேவால். 32 வயதாகும் இவர் ஆதத் சே மஜ்பூர் என்னும் நகைச்சுவை தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமானவர். மும்பையில் தனது மனைவியுடன் கார்கர் நகரில் வசித்து வந்த இவர் கொரோனா ஊரடங்குக்கு முன்னரே வாய்ப்புகள் இன்றி சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை முதலில் பார்த்த அவரது மனைவி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்த போது யாரும் உதவிக்கு வரவில்லை.

பின்னர் வீட்டுக் காவலாளி ஒருவரின் உதவியுடன் தூக்கில் தொங்கிய மன்மீத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று வழக்குப் பதிவு செய்துள்ள கார்கர் பகுதி போலீசார், தனது வீட்டு வாடகை ரூ.8500-ஐ கூட கொடுக்க இயலாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus