சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சுந்தரி’. இந்த சீரியலில் நடித்து வருபவர் துணை நடிகை ரம்யா. பொள்ளாச்சியை சேர்ந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ரம்யா – ரமேஷ் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேஷுக்கு ரம்யா சீரியலில் நடிப்பது பிடிக்காததால், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ரமேஷை மர்ம நபர் ஒருவர் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ரம்யா தான் அவரது நண்பரும், துணை நடிகருமான டேனியல் என்பவருடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. தற்போது, ரம்யா, டேனியல் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ததுடன், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.