Jawan : அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • December 19, 2023 / 07:49 PM IST

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் ‘டன்கி, ஜவான்’ என இரண்டு ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ஜவான்’ கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் அட்லீ இயக்கியிருந்தார். இதில் ஷாருக்கான் டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டியிருந்தார். ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1160 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus