ஷாருக்கான் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘ஜவான்’ படத்தின் ‘வந்த எடம்’ பாடல்!

  • July 31, 2023 / 01:03 PM IST

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இப்போது இவர் நடிப்பில் ‘டன்கி, ஜவான்’ என இரண்டு ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஜவான்’ படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஷாருக்கான் டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறாராம். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்பட்ட இதன் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘வந்த எடம்’-ஐ ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus