அடேங்கப்பா… 9 நாட்களில் ஷாருக்கானின் ‘ஜவான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?
September 16, 2023 / 06:20 PM IST
|Follow Us
பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் ‘டன்கி, ஜவான்’ என இரண்டு ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ஜவான்’ கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் ரிலீஸானது.
இந்த படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார். இதில் ஷாருக்கான் டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டியுள்ளார். ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்துள்ளார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 9 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.735.02 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Jab woh villain banta hai na toh uske saamne koi bhi hero tik nahin sakta… and, the rest is history!