அடேங்கப்பா… 10 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • February 4, 2023 / 04:47 PM IST

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான் . ஷாருக்கான் நடிப்பில் ‘பதான் படம் சமீபத்தில் வெளியானது . கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹிந்தி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியானது . இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

பதான் படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார் . படத்தில் வில்லனாக மிரட்டி உள்ளார் ஜான் ஆப்ரஹாம் . மேலும் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . ‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது .

இந்நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . ஜனவரி மாதம் 25-ஆம் தேதி வெளியான இந்த படம் 10 நாட்களில் இந்தியாவில் மட்டும் 379.18 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது .

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus