அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • April 12, 2023 / 10:30 AM IST

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் ‘பதான், டன்கி, ஜவான்’ என மூன்று ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘பதான்’ படம் இந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 25-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார்.

இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஜான் ஆப்ரஹாம் நடித்திருந்தார். கெஸ்ட் ரோலில் சல்மான் கான் நடித்திருந்தார். இதனை ‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இந்நிலையில், உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1050.05 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus