ஷாருக்கான் – ஜான் ஆப்ரஹாம் இணைந்து நடித்துள்ள ‘பதான்’… வெளியானது சூப்பரான ட்ரெய்லர்!

  • January 10, 2023 / 03:38 PM IST

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இப்போது இவர் நடிப்பில் ‘பதான், டன்கி, ஜவான்’ என மூன்று ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘பதான்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ளார்.

இதனை ‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இன்று (ஜனவரி 10-ஆம் தேதி) இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற ஜனவரி 25-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus