இந்தி திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார் . சமீபத்தில் ஜவான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .
முன்னதாக இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது .
நடிகர் ஷாருக் கான் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பதான் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் பதான் இன்னும் உயிரோட இருக்கான் என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.