‘ஜவான்’ ஷூட்டிங்கில் ரஜினி.. விஜய் கொடுத்த சூப்பரான விருந்து… ஷாருக்கான் போட்ட ட்வீட்!

  • October 8, 2022 / 07:55 PM IST

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இப்போது இவர் நடிப்பில் ‘பதான், டன்கி, ஜவான்’ என மூன்று ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஜவான்’ படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஷாருக்கான் போலீஸ், வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறாராம். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை அடுத்த ஆண்டு (2023) ஜூன் 2-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய பிளான் போட்டுள்ளனர்.

கடந்த 30 நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் சென்னை ஷெட்யூல் ஷூட்டிங் இப்போது முடிவடைந்துள்ளது. இது குறித்து ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த 30 நாட்களில் ‘ஜவான்’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு முறை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி சார் வந்து என்னை வாழ்த்தினார். நடிகை நயன்தாராவுடன் படம் பார்த்தேன். நடிகர் விஜய் சேதுபதியுடன் நீண்ட நேரம் விவாதித்தேன். நடிகர் ‘தளபதி’ விஜய் சூப்பரான விருந்து கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus