முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
2000-யில் அஜித்துக்கு திருமணம் நடந்தது. இவர் அவருடன் ‘அமர்க்களம்’ படத்தில் இணைந்து நடித்த பிரபல நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.
தற்போது, ஷாலினி நேற்று (ஏப்ரல் 24-ஆம் தேதி) இன்ஸ்டாகிராமில் தங்களது 23-வது திருமண நாள் ஸ்பெஷலாக அஜித்துடன் இருக்கும் ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.