“மீராமிதுன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்”: ஷாலு ஷம்மு!

  • August 14, 2020 / 10:29 PM IST

தற்போது இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி மீராமிதுன் மற்றும் பெரிய நட்சத்திரங்களைப் பற்றிய அவரது நெகட்டிவான விமர்சனங்களும் தான். இதற்கு பலரும் பதிலடி கொடுத்து வந்தாலும் மீராமிதுன் இந்த விமர்சனங்களை நிறுத்திய பாடில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற மீராமிதுன், கமல்ஹாசன், விஜய், சூர்யா, த்ரிஷா என தமிழில் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரையும் விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதற்கு அவரது ரசிகர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பலரும் மீராமிதுனை திட்டியும் அவருக்கு அறிவுரை கூறியும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை ஷாலு ஷம்மு, மீராமிதுனின் இந்த நெகட்டிவ் விமர்சனங்களை தட்டிக் கேட்கும் விதமாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த வீடியோக்களுக்கு கொச்சையான வார்த்தைகளை பேசி பதிலடி கொடுத்து வரும் மீராமிதுன், தற்போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகை ஷாலு ஷம்மு தன்னைப் பற்றி தவறான கருத்துக்களை பதிவிடுவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மீராமிதுன் மீது காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே புதுக்கோட்டை விஜய் ரசிகர்மன்றம் விஜய் பற்றி அவதூறாக பேசியதற்காக மீராமிதுன் மீது புகார் கொடுத்துள்ள நிலையில், தற்போது மீண்டும் மீராமிதுன் மீது புகார் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus