ஆபாசமாக கேள்விகளை கேட்ட ரசிகர்கள்.. பதிலடி கொடுத்த ஷாலு ஷம்மு!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ஷாலு ஷம்மு. அதன் பிறகு ‘தெகிடி, தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், றெக்க, Mr.லோக்கல், இரண்டாம் குத்து’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ஷாலு ஷம்மு நடிப்பில் விஜய் சேதுபதி படமும், இரண்டு வெப் சீரிஸ்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்க, ஹீரோயினாக அனு க்ரீத்தி நடிக்கிறார். மேலும், காமெடியில் கலக்க ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ஃபேமஸான புகழ் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. பின், கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமானதால் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நடிகை ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது சில ரசிகர்கள் அவரிடம் ஆபாசமாக கேள்வி கேட்டனர். அதற்கு ஷாலு ஷம்மு அவர்களது பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார்.

Share.