நம்ம ஷாலு ஷம்முவா இது?… காட்டுவாசி கெட்டப்பில் புதிய போட்டோஷூட்!

  • September 26, 2020 / 04:30 PM IST

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.

ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ஷாலு ஷம்மு.

அதன் பிறகு ‘தெகிடி, தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், றெக்க, Mr.லோக்கல்’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ஷாலு ஷம்மு நடிப்பில் சில படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். காட்டுவாசி கெட்டப்பில் (மேக்கப், காஸ்டியூம்) ஷாலு ஷம்மு இருக்கும் இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

https://twitter.com/ShaluShamu/status/1309768397492645889

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus