சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’, இயக்குநர்கள் அன்பறிவு படம் என 4 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘இந்தியன் 2’ படத்தில் மிக முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைக்கும் இதற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரனுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரிக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட இந்த படத்தின் GLIMPSE ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.