தென்-ஆப்ரிக்காவுக்கு செல்லும் ‘இந்தியன் 2’ படக்குவினர்… ஷங்கர் போட்ட மாஸ்டர் ப்ளான்!

  • March 15, 2023 / 08:12 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 2’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் பா.இரஞ்சித் படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘இந்தியன் 2’ படத்தில் மிக முக்கிய ரோல்களில் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைக்கும் இதற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரனுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரிக்கிறார். தற்போது, இதன் புதிய ஷெட்யூல் ஷூட்டிங் அடுத்த வாரத்திலிருந்து தென்-ஆப்ரிக்காவில் ஆரம்பமாகவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 14 நாட்கள் நடக்கவுள்ள இந்த ஷெட்யூலில் மாஸான ஆக்ஷன் காட்சியை ரயிலில் படமாக்க ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus