தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பவித்ரன் ஆகியோருக்கு துணை இயக்குனராக தன் திரையுலக பயணத்தை தொடங்கிய ஷங்கர், 1993 ஆம் வருடம் வெளியான “ஜென்டில்மேன்” திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ஜென்டில்மேன் அப்போதைய தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் திரைப்படமாக அமைந்தது. அர்ஜுன் சார்ஜா இந்தப்படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக் தளத்திற்காக பெரிதும் மக்களால் பாராட்டப்பட்ட இந்த திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் தொடங்கி தொடர்ந்து ஷங்கரின் இயக்கத்தில் உருவான 6 படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்பட்ட ஷங்கர், காதலன், இந்தியன், ஜீன்ஸ் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம் “முதல்வன்”. மீண்டும் அர்ஜுன் சார்ஜாவின் நடிப்பில் முதல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
முதன்முதலில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதற்காக அணுகினாராம் ஷங்கர் ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகுடன் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூகமாக முடியாததால் இந்த வாய்ப்பு விஜய்யை விட்டு சென்றுவிட்டது.
பின்பு இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தவுடன் தன் மகனுக்கு வந்த பெரிய வாய்ப்பு நழுவிப் போனதை நினைத்து வருத்தப்பட்டாராம் எஸ்.ஏ.சந்திரசேகர். இதுகுறித்து ஷங்கர் தற்போது ஒரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.