ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் ‘RC15’-ன் டைட்டில் அறிவிப்பு… வைரலாகும் வீடியோ!

  • March 27, 2023 / 01:05 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் புதிய படத்தில் டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடித்து வருகிறார். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம்.

இதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம். இது தயாரிப்பு நிறுவனம் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’-யின் 50-வது படைப்பாம். இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அஞ்சலி, சமுத்திரக்கனி, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைத்து வரும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 27-ஆம் தேதி) ராம் சரணின் பர்த்டே ஸ்பெஷலாக இந்த படத்துக்கு ‘கேம் சேஞ்சர்’ (GAME CHANGER) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்ததுடன், டைட்டில் லோகோவையும் வெளியிட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus