‘அந்நியன்’ ரீமேக் சர்ச்சை… ‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த ஷங்கர்!

  • April 15, 2021 / 10:13 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் ரெடியாகி வந்த புதிய படமான ‘இந்தியன் 2’வில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்து வந்தார். இப்படத்தின் புது ஷெடியூல் ஷூட்டிங்கை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், இயக்குநர் ஷங்கர் வேறு ஒரு புதிய படத்தை இயக்க சமீபத்தில் ஒப்பந்தமானார்.

இந்த படத்தில் ஹீரோவாக டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்க உள்ளாராம். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ள இன்னொரு புதிய படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

ஹிந்தி மொழியில் உருவாக உள்ள இந்த படத்தில் ஹீரோவாக பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங் நடிக்க உள்ளாராம். இந்த படம் விக்ரம் – ஷங்கர் காம்போவில் வெளியாகி தமிழில் ஹிட்டான ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்காம். ‘பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ள இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2022) ஆரம்பிக்க பிளான் போட்டுள்ளார் ஷங்கர்.

இதற்கிடையில் இன்று காலை ‘அந்நியன்’ படத்தை தமிழில் தயாரித்த ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் ஹிந்தி வெர்ஷனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “தன்னுடைய அனுமதியின்றி இப்படத்தை ரீமேக் செய்வது சட்ட விரோதம்” என்று இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தற்போது, இது தொடர்பாக ஷங்கர் “அந்நியன் படத்தின் கதை, திரைக்கதை எனக்கே சொந்தம். இதன் முழு உரிமை என்னிடம் தான் இருக்கிறது. ஆகையால், நான் நினைத்தபடி இதனை ரீமேக் செய்து கொள்ளலாம்” என்று குறிப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus