தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பவித்ரன் ஆகியோருக்கு துணை இயக்குனராக தன் திரையுலக பயணத்தை தொடங்கிய ஷங்கர், 1993 ஆம் வருடம் வெளியான “ஜென்டில்மேன்” திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ஜென்டில்மேன் அப்போதைய தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் திரைப்படமாக அமைந்தது. அர்ஜுன் சார்ஜா இந்தப்படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக் தளத்திற்காக பெரிதும் மக்களால் பாராட்டப்பட்ட இந்த திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் என தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் பணிபுரிந்துள்ளார்.
தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் “இந்தியன்2” படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்று அனைவருக்குமே தெரிந்த விஷயமாக இருக்கிறது.
இவர் “இந்தியன்-2” திரைப்படத்தை தொடர்ந்து, துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் மற்றும் ஒரு கதாபாத்திரத்திற்கு பிரபல kjr ப்ரொடக்ஷன் உரிமையாளர் ராஜேஷ் பொருத்தமாக இருப்பார் என்றும், அதனால் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது.