ராம் சரணை தொடர்ந்து பாலிவுட் ஹீரோவுடன் கூட்டணி… இயக்குநர் ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்!

  • February 19, 2021 / 11:38 AM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இப்போது, இவர் இயக்கத்தில் ரெடியாகி வரும் ‘இந்தியன் 2’வில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்கிறார். கமல் அரசியலில் பிஸியாக இருப்பதால், இப்படத்தின் புது ஷெடியூல் ஷூட்டிங்கை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், இயக்குநர் ஷங்கர் வேறு ஒரு புதிய படத்தை இயக்க சமீபத்தில் ஒப்பந்தமானார்.

இந்த படத்தில் ஹீரோவாக டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்க உள்ளாராம். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம். இதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளாராம். இது தயாரிப்பு நிறுவனம் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’-யின் 50-வது படைப்பாம்.

இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாம். தற்போது, இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ள இன்னொரு புதிய படம் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. ஹிந்தி மொழியில் உருவாக உள்ள இந்த படத்தில் ஹீரோவாக டாப் பாலிவுட் ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங் நடிக்க உள்ளாராம். ராம் சரண் படத்தை முடித்ததும் ரன்வீர் சிங் படத்தை ஷங்கர் இயக்குவாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.