ராம் சரண் படத்துக்காக ஷங்கர் செய்யும் புதுமையான விஷயம் !

  • November 16, 2022 / 11:26 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர் . ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் ராம் சரண் நடிக்கும் அவரது 15 படத்தை இயக்கி வருகிறார் . இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது . கமல் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் சிங் , ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட நடிகைகள் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது .

ராம் சரண் நடிக்கும் பெயரிடாத RC 15 படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார் . இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பாராஜ் கதை எழுதி உள்ளார் . கியாரா அத்வாணி இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது .

இந்நிலையில் RC 15 படத்தின் பாடல் காட்சியை நியூசிலாந்து நாட்டில் படமாக்க உள்ளார் ஷங்கர் . இந்த ஒரு பாடலுக்காக 15 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளார் என்றும் நியூஸிலாந்து நாட்டில் படமாக்க உள்ள முதல் தென்னிந்திய படம் இது தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus