மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் விஜய் தான் ஒரு பெரிய ஸ்டார் என்கிற பந்தாவே இல்லாமல் சாதாரண ஆள் போன்று தான் இருந்தார் என்று சாந்தனு பாக்யராஜ் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் பட ரிலீஸ் கொரோனா வைரஸ் பிரச்சனையால் தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் சாந்தனு பாக்யராஜ் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, லாக்டவுன் வாழ்க்கை குறித்து நானும், மனைவியும் சேர்ந்து நடித்த குறும்படத்தை செல்போனில் எடுத்திருக்கிறோம். மாஸ்டர் மட்டும் அல்ல அனைத்து படங்களின் ரிலீஸும் தள்ளிப் போயுள்ளது.
மாஸ்டர் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கும் படம். எனக்கு ரொம்ப பிடிச்ச விஜய்ணாவுடன் நான் பண்ணும் படம் மாஸ்டர். அதை ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனால் ரிலீஸ் தள்ளிப் போய்விட்டது. இருப்பினும் எது நடந்தாலும் நல்லதுக்கே என்று நினைக்கிறேன். இந்த லாக்டவுனில் காத்திருந்து காத்திருந்து மாஸ்டர் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. ஆனால் மாஸ்டர் விரைவில் தியேட்டர்களுக்கு வரும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
படத்தில் பார்த்து ரசித்த விஜய்ணாவுடன் சேர்ந்து நடிப்பது டஃப்பான விஷயம். முதல் இரண்டு நாட்கள் ஷாக்கில் இருந்தேன். செட்டில் அவர் தளபதி விஜய் எல்லாம் இல்லை. ஒரு சாதாரண ஆளாக தான் இருப்பார். ஷாட் இல்லாத நேரத்தில் அனைவரையும் அழைத்து பேசுவார். நம்ம என்ன சொன்னாலும் பொறுமையாக கேட்பார். அவர் கண்ணாடி போட்டுக்கிட்டு உட்கார்ந்திருப்பார்.
ஆனால் சுத்தி என்ன நடக்குதுன்னு பார்த்துக்கிட்டே இருப்பார். விஜய் கேரவனுக்கு போகவே மாட்டார். பிரேக்னு சொன்னால் தான் கேரவனுக்கு போவார். டெல்லி கன்னாட் பிளேஸில் விஜய்ணா மாஸ்க் எதுவும் போடாமல் ஜாலியாக நடந்து வந்தார். சின்ன குழந்தை போன்று சந்தோஷப்பட்டார். எதிர்காலத்தில் நோட் பண்ண வேண்டிய இயக்குநராக இருப்பார் லோகேஷ் என்று விஜய்ணா என்னிடம் கூறினார். நான் ஹீரோவாக நடிக்கும் படத்தை விட மாஸ்டர் போன்ற படத்தில் எனக்கு 100 சதவீத விசிபிலிட்டி கிடைக்கும் என்றார்.